கவினுக்கு ஜோடி.. யஷ்ஷுக்கு அக்கா.. டென்ஷனான நயன்தாரா ரசிகர்கள்..!

nayanthara-play-sister-role-yash-acting-toxic-movie

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. முன்னதாக, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது.

nayanthara-play-sister-role-yash-acting-toxic-movie

இந்நிலையில், 39 வயதாகும் நயன்தாரா தற்போதும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், உடலை பிட்டாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக, நயன்தாரா அடுத்த லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில், இவருக்கு ஜோடியாக தன்னைவிட வயது குறைந்த இளம் நடிகர் கவின் உடன் நடிக்க உள்ளார். அதுவரை படத்தின் போஸ்டர் ஒன்றில் நயன்தாராவுடன் கவின் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்பட வெளிவர எல்லோருக்கும் செம ஷாக். இந்நிலையில், நயன்தாராவின் ரசிகர்கள் தயவு செஞ்சு முத்த காட்சி மட்டும் வச்சிராதீங்க எங்க மனசு தாங்காது என்று கமெண்ட்களில் குமுறி வருகின்றனர்.

nayanthara-play-sister-role-yash-acting-toxic-movie

அதேபோல் நடிகை கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யஷ் நடித்துவரும் திரைப்படத்தில் ஹீரோ யாஷ்க்கு அக்காவாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு எழுந்த நிலையில், நயன்தாரா இந்த படத்திற்கு சுமார் 20 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. எனவே நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் படத்திற்கு இது பெரிய பலம் என கருதி அவர் கேட்ட சம்பளத்தை நடிக்க கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக இருக்கும் நயன்தாராவை இப்படி அக்காவா நடிக்க வைத்துள்ளது தான் தற்போது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. அதாவது, நயன்தாராவுக்கு தற்போது 39 வயதாகும் நிலையில், இவரை விட சுமார் ஐந்து வயது குறைவான கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனால், ஒரு வயது மட்டுமே யாஷ் நயன்தாராவை விட குறைவானவர் என கூறி ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

nayanthara-play-sister-role-yash-acting-toxic-movie

Share this post