'இப்டியே இருந்தா 12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்..' நயன்தாராவின் மிரட்டலான O2 டீசர் !

Nayanthara ott film o2 teaser released and getting viral on social media

தென்னிந்திய திரையுலகில் டாப் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, கோலமாவு கோகிலா, டோரா போன்ற படங்கள் மூலம் தனது தனித்துவத்தை நிரூபித்தார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்த பிறகு, தற்போது, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘O2’ . ஜி எஸ் விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Nayanthara ott film o2 teaser released and getting viral on social media

ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கும் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை கூறும் படம் “ஓ-2” என சொல்லப்படுகிறது.

Nayanthara ott film o2 teaser released and getting viral on social media

தமிழ்நாடு, கேரளா பார்டர் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இப்படத்தில் 8 வயது மகனுக்கு அம்மா பார்வதியாக நயன்தாரா நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதில் யூடியூப் புகழ் ரித்விக் நயன்தாரா மகனாக நடித்துள்ளார். இதன் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு சீனும் மிரட்டலாக உள்ளது.

Share this post