'குழந்தைக்களுக்காக இந்த விஷயத்தை நீ விட்டுவிட்டாய்' நயன் பிறந்தநாளில் விக்கி பதிவிட்ட உருக்கமான பதிவு.
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.
நேற்று, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். மேலும், திருமணம் ஆகி குழந்தை பெற்று இவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், நயன்தாரா கணவர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
நயன்தாராவின் 38 வது பிறந்தநாள் குறித்து விக்னேஷ் சிவன் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதில் அவர், உன்னுடன் இது என்னுடைய 9வது பிறந்தநாள் நயன். ஒவ்வொரு பிறந்த நாளும் சிறப்பாகவும், மறக்க முடியாததாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கிறது. ஆனால், கணவன் மனைவியுமாக நாம் வாழ்க்கை தொடங்கி இருப்பதால் இது எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானது. எதை செய்தாலும் நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்கிறீர்கள். இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபரை பார்த்தேன்.
இன்று நான் உன்னை ஒரு தாயாக பார்க்கும்போது இதுவே உங்களின் மகிழ்ச்சியான மற்றும் முழுமையான தருணம். நீங்கள் இப்போது முழுமையாகி விட்டீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள். குழந்தைகள் உங்கள் முகத்தை முத்தமிடுவதால் இந்த நாட்களில் நீங்கள் மேக்கப் போடுவதில்லை. இத்தனை வருடங்களில் உன்னை விட அழகான ஒருவரை நான் பார்த்ததில்லை. உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை, மகிழ்ச்சியும் இனிமேலும் இருக்கும். நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் கனெக்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மேலும், நயன்தாரா அடுத்து நடிக்கவிருக்கும் 81வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.