என்ன நயன்தாராவா இது? இப்படி ஆகிட்டிங்க.. நயன் லேட்டஸ்ட் லுக் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் கனெக்ட் படத்தின் ட்ரைலர் மற்றும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

இதில் நயன்தாராவை பார்த்து ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் நயன்தாராவின் முகம் மற்றும் உடல் மிகவும் மெலிந்து இது நயன்தாராவா என அதிர்ச்சியாகும் அளவிற்கு உள்ளார். பளீச் என இருக்கும் அவரது முகமும் டல்லாக இருக்கிறது. இது நயன்தாராவின் மேக்கப்பின் எபெக்ட்டா அல்லது.. சர்ஜரி என்ற பெயரில் அவரே இப்டி பண்ணி கொண்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

nayanthara latest look in dull and bone face shocks fans and trending on social media

Share this post