நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாம்.. அப்போ இனி நடிக்க ? வைரலாகும் பதிவு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல் !
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறித்து netflix டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கொண்டிடாடி வருவதை விக்னேஷ் சிவன் புகைப்படங்களை பதிவிடுவதன் வாயிலாக பகிர்ந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா சர்ப்ரைஸாக பிரம்மாண்டமாக துபாயில் கொண்டாடினார். உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா முன்பு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது எடுத்த புகைப்படங்களை வரிசையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார் விக்னேஷ் சிவன்.
அதில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளோடு விளையாடியபோது எடுத்த புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. அந்த புகைப்படத்தில் ‘குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்’ என குறிப்பிட்டிருந்தார் விக்கி. அவரின் இந்த பதிவு ரசிகர்களை சற்று குழப்பமடைய செய்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி சூசகமாக சொல்கிறாரா விக்கி என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும், இதனால், தற்போது கமிட் ஆகியுள்ள திரைப்படங்களுக்கு பிறகு நடிப்பாரா என்ற கேள்வியுடன் இந்த தகவல் செம வைரலாகி வருகிறது.
#Nayanthara - @dinathanthi 🤷🏻♀️🛍 pic.twitter.com/9vZp8h8nM2
— gowri_gal (@gowri_gal) October 7, 2022