இந்த சீன் பாத்து வெட்கப்பட்டு சமந்தாவை கட்டியணைத்த நயன் ! Viral Video

Nayanthara hugs samantha on seeing her own film video getting viral

சிம்பு, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் போடா போடி. நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்திலேயே பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை தந்தது.

இதன் பின்னர், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். நானும் ரவுடி தான் திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் நயன் மற்றும் இவருக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Nayanthara hugs samantha on seeing her own film video getting viral

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தார, சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் வெளியாகி ஹிட் கொடுத்து வருகிறது.

Nayanthara hugs samantha on seeing her own film video getting viral

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Nayanthara hugs samantha on seeing her own film video getting viral

ஏப்ரல் 28ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் நயன் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Share this post