பொன்னியின் செல்வன்'ல நடிக்கலனாலும்.. சோழ நாட்டு அரசியாக மாறிய நயன்.. ட்ரெண்டாகும் போட்டோஸ் !

nayanthara get up as chola dynasty queen photos getting trending

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறித்து netflix டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கொண்டிடாடி வருவதை விக்னேஷ் சிவன் புகைப்படங்களை பதிவிடுவதன் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் மகாராணி கெட்டப்பில் நயன்தாரா உடைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

அதாவது, தனியார் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நயன்தாரா நடித்திருந்தார். அதில் அவர், சோழ நாட்டின் மகாராணி போல் கெட்டப் போட்டு நடித்திருந்தார். சோழ நாட்டுடைய பாரம்பரியத்தை போற்றும் வகையில் நயன்தாரா உடை மற்றும் நகை அணிந்து நடித்திருந்தார்.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

தற்போது அந்த நகைக்கடை விளம்பரத்தினுடைய புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காமலேயே நயன்தாரா ராணி கெட்டப்பில் செம மாசாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

nayanthara get up as chola dynasty queen photos getting trending

nayanthara get up as chola dynasty queen photos getting trending

Share this post