'உன் கைகள் கோர்த்து உன்னோடு போக'…..குழந்தை குட்டிகளுடன் ஜாலி பண்ணும் நயன்தாரா!
லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்ப்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . இந்நிலையில் நயன்தாராவை தனது இன்ஸ்டாகிராமில் கணவர் மற்றும் குழந்தை குட்டிகளுடன் ஜாலியா ஒரு வாக் சென்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட எல்லோரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு லவ் இருப்பதாக ரசிகர்கள் கூறி இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.