மும்பையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்..!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர்.
திருமணத்திற்கு பின் திருஷ்டி போல விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கவிருந்த AK62 வாய்ப்பு கை நழுவி போனது. அதே போல, நடிகை நயன்தாரா கமிட்டாகியிருந்த இரு திரைப்படங்களுக்கும் கால்ஷீட் தரமுடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பு நயன்தாராவிற்கு கைநழுவி போனது என தகவல் வெளியானது.
தற்போது, ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன். இதன் நடுவே, விக்னேஷ் சிவன் - நயன்தாரா பிரியப்போவதாக இணையத்தளத்தில் வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில், நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொள்ள மும்பைக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். அதன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
#SanjayLeelaBhansali sees off #Nayanthara and her husband post meeting in Mumbai last night #SabinaKhan #reelsinstagram #cranchmedia pic.twitter.com/FtAukRBv0i
— Cranch Media (@cranch_official) March 6, 2023