வாடகைத் தாய் மூலம் நயன் - விக்கி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்.. இதுனால தானா?
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், நேற்று அக்டோபர் 9ம் தேதியான நேற்று, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பியுள்ள நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சினிமா நடிகைகள் ஏராளமானோர் இந்த முறையை பின்பற்றி குழந்தை பெற்று வருகின்றனர். பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், தற்போது அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.
இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது முறை என்றால் என்ன ? அதற்கு என்ன வழிமுறைகள் ? என்பதை விரிவாக பார்க்கலாம். உடல்நல பிரச்சனைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத் தாய் முறையாகும்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் விந்தணு செலுத்தப்பட்டு, பின்னர் அந்த கருவை, வாடகைத் தாயின் கருப்பையில் பொறுத்துவர். அதன்பிறகு அந்த வாடகைத் தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் பலருக்கு இந்த வாடகைத்தாய் முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வாடகைத்தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்தணுக்களை செலுத்தி செயற்கை முறையில் கருவூட்டப்படும் பாரம்பரிய முறையின் படி குழந்தை பெற்றெடுத்தால், வாடகைத் தாயும் குழந்தையின் உயிரியல் தாயாகக் கருதப்படுவதுண்டு. அதே வேளையில், தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொறுத்து குழந்தை பெற்றுக்கொண்டால், அப்போது வாடகைத் தாய் உயிரியல் தாயாக முடியாது. ஏனெனில் கருமுட்டை மற்றும் விந்தணு இரண்டுமே சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பெறப்பட்டது. ஆதலால் இந்த முறையில் வாடகைத் தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது.
மற்ற கர்ப்பங்களைப் போலவே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் போதும் சில மருத்துவ அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. சமீப காலமாகவே இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக நடிகைகள் இந்தமுறையை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.