'நான் தென்னிந்திய படங்களை எப்போதும் பார்த்ததில்லை..' தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு !

Nawazuddin siddiqui says that he wont watch south language films speech getting viral

கடந்த சில தினங்களாக சமூக வலைதளபக்கங்களில் ஹிந்தி vs தென்னிந்திய மொழிகள் பிரச்சனை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தி தேசிய மொழி அல்ல என கன்னட நடிகர் சுதீப் கூறிய நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சர்ச்சையாக பதில் அளித்து இருந்தார்.

Nawazuddin siddiqui says that he wont watch south language films speech getting viral

இந்தி தான் தேசிய மொழி என அவர் கூற இணையத்தில் பெரிய கருத்து மோதல் நடந்து வருகிறது. பல தென்னிந்திய நடிகர் - நடிகைகளும் மற்றும் பாலிவுட் நடிகர்களும் இந்த விவாதத்தில் இறங்கி இருக்கின்றனர். சமஸ்க்ரிதம் தான் தேசிய மொழி என கங்கனா ரணாவத் நேற்று கருத்து கூறி இருந்தார். இது இந்த பிரச்சனைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

Nawazuddin siddiqui says that he wont watch south language films speech getting viral

புஷ்பா, RRR, KGF 2 போன்ற தென்னிந்திய படங்கள் அடுத்தடுத்து ஹிந்தியில் நல்ல வசூல் குவித்த நிலையில் தான் இந்த பிரச்சனை வெடித்து இருக்கிறது என பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்தின் ரஜினிக்கு வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் பேசியுள்ள ஒரு விஷயம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மாறியுள்ளது.

Nawazuddin siddiqui says that he wont watch south language films speech getting viral

அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் தென்னிந்திய படங்களை எப்போதும் பார்த்ததில்லை என கூறி இருக்கிறார். இவர் பேட்ட படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Nawazuddin siddiqui says that he wont watch south language films speech getting viral

Share this post