'என் Biopicல இந்த தமிழ் ஹீரோ தான் நடிப்பார்' - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்ன சூப்பர் தகவல்..
தமிழகத்தில் மிக வைரல் கிரிக்கெட் வீரராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடராஜன். இவர் சேலம் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர். இந்திய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆர்வத்தில் தான் இவர் தன்னுடைய பயிற்சியை தொடங்கிய இவர், தனது விடா முயற்சியினால் பிரபலமான கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருகிறார்.
கிராமங்களில் இருந்து வரும் பல இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருடைய அம்மா தள்ளு வண்டியில் சிக்கன் கடை நடத்தி தான் இவரை படிக்க வைத்தார். கடின உழைப்பும், போராட்டம் தான் இவரை இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறது. தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து நடராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, “மாரத்தான் என்பது அனைவருக்குமே முக்கியமானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மாரத்தானில் ஓட வேண்டும். உடல் வலிமை, மன வலிமை அதிகரிக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ஓட்டம் என்பது அவசியமான ஒன்று. அதற்கு மாரத்தான் துணையாக இருக்கும். கிராமங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னை போல பல இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன். மீண்டும் என்னுடைய திறமையை காண்பிப்பேன். இந்திய அணியில் பங்கேற்று விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கட்டாயம் எடுக்கப்படும். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு இந்த படம் உருவாகலாம். இருந்தாலும் அதில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார். அவர்தான் அந்த படத்தையும் தயாரிப்பார் என்று கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது மிகுந்த கடின உழைப்பினால் முன்னேறி வந்தவர். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில், நடராஜ் கூறியுள்ள இந்த தகவல் செம வைரலாகி வருகிறது.