என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டான்… நாஞ்சில் விஜயன் மனைவி கதறல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாகிவிட்டார் .
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பெண் வேடமிட்டு நடித்து அசத்தியினார். இதனால் மிக குறுகிய காலத்திலே பிரபலமான நாஞ்சில் விஜயன் சூரியதேவி என்ற பெண்ணை பேட்டி எடுத்த போது வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டது குறித்து மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்.
இதனால் வனிதா விஜயகுமார் நாஞ்சில் விஜயன் மீதும் சூரியதேவி மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த சமயத்தில் நாஞ்சில் விஜயன் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்பட்டார். மேலும் வனிதா… சூரியதேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவருடன் நாஞ்சில் விஜயனுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த தகராறு அடிதடி வரை சென்றது. அதை அடுத்து நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர். இப்படியாக பெரும் சர்ச்சையில் சிக்கி வந்த அவர் கடந்த ஆண்டு மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் நாஞ்சில் விஜயனின் மனைவி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் எனக்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதாவது திருமணத்தின் போது வரை அவர் என்னிடம் வயதையே கூறவில்லை. என்னை பெண் பார்க்க வந்த போது இவருடைய தலைமுடி மொத்தமும் நரைத்து வெள்ளையாகவே இருந்தது. இப்போ இவருக்கு அங்கிள் வயசு ஆகுது. அதை நான் எப்போ தெரிந்து கொண்டேன் என்றால்… கல்யாணத்துக்கு பிறகு ஒரு நாள் இவருக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன்.
அப்போது தலை முழுக்க வெளுத்து சாயம் போல் வந்தது. உடனே நீ என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்ட உன்னோட வயசு என்ன சொல்லு? எனக்கூறி அவரை அடித்தேன். அதற்கு நான் உன்னை ஏமாற்றவும் இல்லை என்னுடைய வயசை மறைக்கவும் இல்லை. என்னுடைய தலைமுடி மட்டும்தான் நரைமுடி ஆகிவிட்டது. அதனால் தான் சாயம் அடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறி சிரித்தார் என இவர்கள் இருவரும் அந்த பேட்டியில் கலகலப்பாக பேசினார்கள். தற்போது இந்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.