நாக சைதன்யாவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பாராத பெரிய இழப்பு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள் !

பிரபல நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா, தற்போது தெலுங்கு மொழி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தேங்க் யூ.
ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்து ஜூலை 22ம் தேதி தியேட்டர்களில் இப்படம் ரிலீஸானது. படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 4.5 கோடி வசூல் செய்தது.
திரைப்படம் வெளியாகி 1 வாரம் கூட ஆகாத சூழ்நிலையில், 2022ம் ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படமாக தேங்க் யூ திரைப்படத்தை ஆந்திரா பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் மேலும், வார இறுதி நாட்களில் தேங்க் யூ படம் உலக அளவில் ரூ. 3 கோடி வசூல் செய்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்படும் என தெரிவித்திருக்கிறது.
திரையரங்குகளில் தேங்க் யூ படம் ஓடாததை அடுத்து விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று OTT நிறுவனங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தேங்க் யூ படம் படுதோல்வி அடைந்ததை பார்த்த ரசிகர்கள், இதுவும் கடந்து போகும், கவலைப்படாதீர்கள் என நாக சைதன்யாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
#ThankYouTheMovie is now a prime takeover target for a very early OTT Release like #Acharya. Theatrical is dead in the weekend itself.
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) July 25, 2022
Should A Producer cover some portion of losses or wait?.
This is Why it may be practically impossible to implement Long OTT Windows! https://t.co/Yi4lvqRiVN