சத்தம் இல்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்.. வெளியான நாக சைதன்யா - சோபிதா துலிபாலா புகைப்படம்..!

Naga Chaitanya - Sobitha Thulipala engagement photo released

நாக சைதன்யாவுக்கும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த சோபிதா துலிபலாவுக்கும் இடையே சில வருடங்களாகக் காதல் என பேசப்பட்டது. இருவரும் வெளிநாடுகளில் சுற்றி வந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், இருவருமே அவர்களது காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லவேயில்லை.

Naga Chaitanya - Sobitha Thulipala engagement photo released

இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா ஆகிய இருவருக்கும் ஐதராபாத்தில் நாகார்ஜூனாவின் இல்லத்தில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள்.

Naga Chaitanya - Sobitha Thulipala engagement photo released

நாக சைதன்யா, சோபிதா நிச்சய போட்டோவை பகிர்ந்து நாகார்ஜூனா வெளியிட்ட பதிவில், ‛‛எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபலாவுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். துலிபலாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பாராக!

8.8.8 எல்லையற்ற அன்பின் ஆரம்பம்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this post