இப்டி ஒரு கண்டிஷனோடு 2வது திருமணத்திற்கு ஓகே சொன்ன நாக சைதன்யா..

Naga chaitanya puts condition for his second marriage

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல விருதுகளையும் குவித்தார். இதனைத் தொடர்ந்து, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Naga chaitanya puts condition for his second marriage

பின்னர், நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல், 10 எண்றதுக்குள்ள, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாநாயகர்களான விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார்.

Naga chaitanya puts condition for his second marriage

டெழுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Naga chaitanya puts condition for his second marriage

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.

Naga chaitanya puts condition for his second marriage

விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Naga chaitanya puts condition for his second marriage

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாவது திருமணத்திற்கு நாக சைதன்யா ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தான் திருமணம் செய்யப் போகும் பெண் நடிகையாக திருமணம் கூடாது என நாக சைதன்யா கண்டிஷன் போயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டாவது திருமணம் குறித்த முறையான அறிவிப்பை அவரது பெற்றோர் விரைவில் அறிவிப்பார்கள் என் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post