காதல் மனைவியை மறவாமல் மறைமுகமாக ட்வீட் பதிவிட்ட நாகசைதன்யா !

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்திருந்தார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

இதனிடையே நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகை ஷோபிதா என்பவரை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் கூட ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனக்கு சொந்தமான பங்களாவுக்கு ஷோபிதாவை நாகசைதன்யா அழைத்து வந்ததாகவும், அங்கு இருவரும் சில மணிநேரம் தங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

இதனை சமந்தா தரப்பில் பரப்பப்பட்ட செய்தி என்றும், நாக சைதன்யாவின் பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு சமந்தா ட்விட்டரில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இத்தனை நடந்தாலும், சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

இப்பொது நாகசைதன்யா நடித்து வரும் திரைப்படம் ‘Thank you’. இந்த படத்தில் இவருடன் ராஷி கண்ணா, மாளவிகா நாயர், அவிக்க கோர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற ஜூன் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷனுக்காக நாகா சைதன்யா தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் #Thankyou என கூறி தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய வளர்ப்பு நாய் ஹாஷ் என 3 புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

இதில் அந்த நாயுடன் இருக்கும் போஸ்டர் தான் இப்பொது மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அது நடிகை சமந்தாவின் நாயாகும். அவரின் வளர்ப்பில் தான் இப்பொது விவாகரத்திற்கு பிறகு அந்த நாய் உள்ளது. இதனால் அம்மா, அப்பா அடுத்து தன்னுடைய காதல் மனைவி சமந்தாவிற்கு பதிலாக அவருடைய நாய் புகைப்படம் போட்டு மறைமுகமாக சமந்தாவை தான் அவர் பேசுகிறார் என பலரும் கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.

Naga chaitanya posts about samantha indirectly tweet getting viral on social media

Share this post