இதே பொழப்பு தானா? சமந்தா காலடி எடுத்து வச்சதே தப்பு - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைது அடுத்து நாகார்ஜுனாவை சமந்தாவின் ரசிகர்கள் கடுமையாக திட்டி சாபம் விட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் நாகார்ஜுனாவின் குடும்ப ரகசியம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து மேலும் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது நாகார்ஜுனாவின் முதல் மனைவியும் நாகா சைதன்யாவின் அம்மாவுமான லக்ஷ்மி நடிகர் நாகர்ஜூனாவை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு ரீராம் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த அதிபர் சரத் விஜயராகவன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது வெளியிலும் வரவில்லை இந்த நிலையில் தற்போது நாகா சைத்தன்யாவின் இரண்டாவது திருமணம் நிச்சயதார்த்தத்தில் அவரது அம்மா லட்சுமியும் அவரது இரண்டாவது கணவரும் இருவரும் ஒன்றாக அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதை பார்த்து கடுப்பான சமந்தாவின் ரசிகர்கள் இவங்க குடும்பத்துக்கு இதே வேலைதான் போல.. கல்யாணம் பண்றது கழட்டி விடுறது… இரண்டாவது கல்யாணம் பண்றது இது வேலையா இருந்திருக்காங்க போல! இந்த குடும்பத்தில் சமந்தா காலடி எடுத்து வைத்ததே மிகப்பெரிய தப்பு என நாகார்ஜுனாவின் குடும்பத்தை சாடித்தள்ளி இருக்கிறார்கள்.