Naane Varuvean Review: நானே வருவேன் - Goosebumps.. Terrific.. த்ரில்லிங்.. ட்விஸ்ட்.. என ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்..
கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் என பெரிய ஹீரோவாக மாறியுள்ள நடிகர் தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் உடன் 4வது முறையாக இணைந்து பணியாற்று திரைப்படம் ‘நானே வருவேன்’. 3 வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, இப்படத்தை உருவாக்கி வருகிறது.
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் சேர்ந்துள்ள தனுஷ் நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். மேலும், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துளளார். இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன், இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் கூட்டணியில் அமைந்த படங்களில் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஷோ தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் பாதி படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். டுவிட்டரில் ரசிகர்கள் நானே வருவேன் படம் எப்படி உள்ளது என்பதை கூறி வருகின்றனர். அப்படி ரசிகர்கள் போட்ட பதிவுகள் சில இதோ..
#Dhanu sir Right Now🔥🔥🔥🔥 #NaaneVaruvaen 1st half verithanam🔥🔥🔥 pic.twitter.com/Cs4GZgFf20
— PonniyinSelvan (@AyapanJamMedia) September 29, 2022