ஆளவந்தான் பாணியில் தனுஷ்.. ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் & செம த்ரில்லிங்😰.. நானே வருவேன் - என்ன கதை தெரியுமா?
கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் என பெரிய ஹீரோவாக மாறியுள்ள நடிகர் தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் உடன் 4வது முறையாக இணைந்து பணியாற்று திரைப்படம் ‘நானே வருவேன்’. 3 வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, இப்படத்தை உருவாக்கி வருகிறது.
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் சேர்ந்துள்ள தனுஷ் நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். மேலும், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துளளார். இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன், இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் கூட்டணியில் அமைந்த படங்களில் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள நானே வருவேன் கதை குறித்து விவரிப்பு இதோ..
இப்படத்தில் தனுஷ் இரட்டையர்களாக நடித்துள்ளார். இதில் ஒருவர் சைக்கோ கில்லர். சிறுவயதில் அவர் செய்த தப்பிற்காக பெற்றோர்கள் கண்டிக்க கோபத்தில் தனது தந்தையை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
இதை அடுத்து பல வருடங்கள் கழித்து பெரியவராக காண்பிக்கப்படும் தனுஷிற்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளன. மறுபுறம் நாயகனாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது குடும்பம் குறித்தும் காட்டப்படுகிறது. இதில் இரண்டு தனுஷிற்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு பிள்ளையுடன் ஒரு காட்டிற்குள் செல்கிறார்.
அங்கு வேட்டையனாக இருக்கும் செல்வராகவன் அவரது மகனை பிடித்து கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார். இதையடுத்து எவ்வாறு மகனை தனுஷ் காப்பாற்றுவார்? சைக்கோவாக இருக்கும் தனுஷ் திருந்துவாரா? என்பது தான் கிளைமேக்ஸ். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.