பிரபல ஹிட் பட தமிழ் இயக்குனரை ‘குட்டிச்சுவரா போன டைரக்டர்’னு சொன்ன மிஷ்கின்.. வைரலாகும் வீடியோ!
இயக்குனர் வின்சண்ட் செல்வாவிடம் யூத், ஜித்தன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனர் மிஸ்கின் அவர்கள் திகில் திரைப்படங்களும், ஆழமான வலிகளையும் திரைக்கதையையும் எடுத்துரைக்கும் அளவிற்கு திரைப்படம் உருவாக்குவது அவரது வழக்கம்.
இவர் இயக்கிய ‘அஞ்சாதே’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நாயகியாக, விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
சந்தோஷ், பூர்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி செம திகில் கூட்டி வைரல் ஆகி படத்தின் ஆர்வத்தினை கூட்டியது. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசுகையில், உதயநிதி தனது டைரக்ஷனில் தான் முதலில் அறிமுகமாவதாக இருந்ததாகவும், இதற்காக அவரை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து யுத்தம் செய் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த சமயத்தில் தான் ராஜேஷ் மாதிரியான குட்டிச்சுவராய் போன டைரக்டரின் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என பேசி இருந்தார்.
உதயநிதியில் ஒருகல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய ராஜேஷ் மேடையில் இருக்கும்போதே மிஷ்கின் இவ்வாறு அநாகரிகமாக பேசியது பலருக்கும் முகசுளிப்பை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சை ராஜேஷ் பெரிதுபடுத்தாவிட்டாலும், அவரது உதவி இயக்குனர்கள் மிஷ்கினுக்கு எதிராக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்களாம். அந்த புகாரில் மிஷ்கின் இவ்வாறு பேசியதற்காக இயக்குனர் எம்.ராஜேஷிடம் நேரில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
To boast saying I read & watch everything International & in most of the stage saying I haven't watched any film of the director of the film function he goes to.
— Cinema Calendar (@CinemaCalendar) November 12, 2022
Though #Mysskin is a nice man, he sounds arrogant & self-righteous on stage at #KalagaThalaivan audio launch pic.twitter.com/At7s87Z1UY