'விக்ரம்' பட ரகசியத்தை போட்டு உடைத்த பிரபல நடிகை.. என்ன இப்டி உண்மைய சொல்லிட்டாங்க!
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார். பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம்.
படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது. சூர்யாவின் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 350 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த பிரபலம் ஒருவர், ‘விக்ரம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், அதன் ரகசியம் குறித்தும் பேசியுள்ளார். அது யாருமில்லை, பிக்பாஸில் தற்போது கலக்கி வரும் மைனா நந்தினி தான். ‘விக்ரம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து மைனா கூறுகையில் ’விஜய் சேதுபதி இருந்த வீடு உண்மையான வீடு தான் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் போதைப்பொருள் உருவாக்கும் லேப் மட்டும் தனியாக செட் போட்டு எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.
ஆனால் படத்தில் வீடும் லேபும் ஒரே இடத்தில் இருப்பது போல் காண்பிக்கப்பட்டு இருக்கும். அதே போல் விஜய் சேதுபதி வீடு இடியும் பாம் காட்சியை எடுக்கப்பட்டபோது அது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சியாக தான் இருக்கும் என்றும் சும்மா நாங்கள் அதிர்ச்சி அடைவது போல் ஆக்ஷன் கொடுத்தால் போதும் என்றுதான் நினைத்தோம். அனைவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கூறிய போது நாங்கள் கண்ணை மட்டும் மூடிக் கொண்டிருந்தோம்.
ஆனால் உண்மையாகவே குண்டுவெடித்து எங்கள் வாய்க்குள் கரும்புகை போனது என்றும் அது ’பிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு போல அனைவரும் மாறிவிட்டோம் என்று சொல்லி அவர் கூற அனைவரும் சிரித்தனர். மேலும் விஜய் சேதுபதி நடிப்பு குறித்து அவர் கூறியபோது வில்லத்தனத்திற்காக அவர் தனியாக நடிப்பைக் கற்றுக் கொண்டு ஒவ்வொரு அசைவையும் மிருகத்தனமாக கொடுத்து இருந்தார் என்றும் குறிப்பாக ஒரு ஷாட்டில் திரும்பும் போது ஆந்தை போல கழுத்தை திருப்பி பார்ப்பார் என்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரகசியத்தையும் மைனா கூறினார்.