மைனாக்கு ஒரு நாள் சம்பளம் லட்சத்துலயே..? ஸ்தம்பித்து போன தனலட்சுமி.. வைரலாகும் வீடியோ!
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல சீரியல்கள் இவருக்கு பிரபலம் பெற்று தந்தது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் அதில் இவர் பெயர் மைனா, அதே பெயரே இவரது அடைமொழியாக மாறிவிட்டது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3, வம்சம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இரண்டாவதாக திருமணம் செய்தவர் நடிகர் யோகேஷ். இவரும் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
அதன் மூலம் செம பேமஸ். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் மாறிப் போயினர். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மைனா ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
தற்போது மைனா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மைனா ஜாலியாக விளையாடி வருகிறார். இது குறித்து கமல் கூட கண்டித்து இருந்தார். இருந்தும், மைனா நந்தினி, அப்படியே தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மைனாவின் சம்பளம் குறித்த ஒரு சர்ச்சை வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது மைனாவும், மணியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்துட்டு சும்மா விடுவாங்களா என பேசுகிறார். உடனே இரண்டு லட்சம் என்று நந்தினி சொல்கிறார்.
இதை கேட்டு தனம் அதிர்ச்சியாகி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சமா! அப்ப 60 நாளைக்கு எவ்வளவு என்று ஆச்சரியத்தில் கேட்கிறார். அதற்கு மணி, ஒரு 90 லட்சம் கிட்ட இருக்கும் என்று சொல்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள், பிக்பாஸ் டைட்டில் வின்னர் பரிசே 50 லட்சம் தான். எதுக்குடா இப்படி எல்லாம் ரீல் விடுறீங்க? என்று மைனாவையும் மணியையும் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
#Myna ku oru naalaiku 1.5 latchamaa😲😲😲#Dhana shocked and we too#Biggbosstamil6 pic.twitter.com/QResalPCfz
— Aadhik Sri (@aadhik_vet09) December 8, 2022