‘நெஞ்சுக்கு நீதி’ சிறப்புக் காட்சியைப் பார்த்த முதலவர் மு.க ஸ்டாலின்.. வைரலாகும் புகைப்படங்கள் !

Mk stalin watches special show of nenjuku needhi movie

2019ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள்15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்னும் புத்தகத்தின் பெயரையே இப்படத்திற்கு வைத்துள்ளனர்.

டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Mk stalin watches special show of nenjuku needhi movie

2021ம் ஆண்டு டிசம்பர் மாதமே இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடை நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2022ம் ஆண்டு மே 20ம் தேதி தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் யூட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சாதி ஏற்றத்தாழ்வுகளை கதைக்களமாக கொண்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் காவல் அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான ட்ரைலரில், சாதி குறித்த வசனங்கள் பொது சமூகத்தினரின் மனசாட்சியை உலுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

Mk stalin watches special show of nenjuku needhi movie

இந்நிலையில், இன்று இப்படத்தின் சிறப்பு கட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்த்துள்ளார். இதில், முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி, அருண்ராஜா காமராஜ், போனி கபூர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Mk stalin watches special show of nenjuku needhi movie

Mk stalin watches special show of nenjuku needhi movie

Mk stalin watches special show of nenjuku needhi movie

Share this post