தயாராகிறது மு.க. ஸ்டாலினின் Biopic - யார் நடிக்கிறாங்கன்னு தெரியுமா..?

mk stalin biopic to get ready soon and samuthirakani to act as mk stalin in movie

விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், பிரபல நடிகர்கள் என மக்கள் மனதில் இடப்பெற்ற பிரபலங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர்கள் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

mk stalin biopic to get ready soon and samuthirakani to act as mk stalin in movie

தமிழில், MS தோனி - The Untold Story என கிரிக்கெட் வீரர் தோனி அவர்களின் கதை எடுக்கப்பட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்ற வெப் தொடரும், தலைவி என்கிற படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

mk stalin biopic to get ready soon and samuthirakani to act as mk stalin in movie

இந்நிலையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக இருந்தாலும், அரசியலில் படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆனவர் ஸ்டாலின்.

mk stalin biopic to get ready soon and samuthirakani to act as mk stalin in movie

இந்த நிலைக்கு வர பல்வேறு போராட்டங்களையும் சந்தித்தது, மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தது தொடங்கி தற்போது முதல்வர் ஆனது வரையிலான காலகட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்படுகிறதாம்.

mk stalin biopic to get ready soon and samuthirakani to act as mk stalin in movie

இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் இத்திரைப்படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது குறித்தான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறதாம்.

mk stalin biopic to get ready soon and samuthirakani to act as mk stalin in movie

மேலும், இதில் மு.க.ஸ்டாலினாக சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post