நொடிக்கு நொடி திகில்.. குலைநடுங்க வைக்கும் 'மிரள்'பட ட்ரைலர்!

miral trailer video released on social media and getting good response

சக்தி பிலிம் நிறுவனம் மற்றும் ராட்சசன், ஓ மை கடவுளே படத்தை தயாரித்த டில்லிபாபு தயாரிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணிபோஜன், கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள படம் மிரள். இசையமைப்பாளர் பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

miral trailer video released on social media and getting good response

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் டில்லி பாபு ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

miral trailer video released on social media and getting good response

கதையின் பின்புலமும், கதை நகரும் விதமும் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அழுத்தமான கதை அமைப்பும், மர்மமும் கலந்து இருப்பதால் படம் மிக அருமையாக வந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆபத்தான இடத்தில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ ஹீரோயின் பற்றி கதை நகர்கிறது.

miral trailer video released on social media and getting good response

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஊரில் இருந்து கிளம்பும் பரத், வாணி போஜன் மற்றும் குழந்தை ஊருக்கு செல்லும் வழியில் சார் பஞ்சர் ஆகி விடுகிறது. அங்கு சில உருவங்கள் காரை சூழ்ந்து கொண்டுள்ளது. அவர்களிடம் மாட்டி தவிக்கும் பரத் வாணி போஜனை சுற்றி கதை நகர்கிறது.

Share this post