மேகா ஆகாஷிற்கு சைலண்டா முடிந்த நிச்சயதார்த்தம்… மாப்பிள்ளை பேக்ரவுண்ட் தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க!
சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன மேகா ஆகாஷ் கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். அவரது தந்தை தெலுங்கு, தாய் மலையாள பின்னணியை கொண்டவர். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படம் வெளியான போது மேகா ஆகாஷிற்கு மிகப்பெரிய பேன் பேஸ் உருவாக்கினார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலமாக ஒட்டுமொத்த இளைஞர்களின் மனசையும் கொள்ளை அடித்து சென்று விட்டார் மேகா ஆகாஷ். அடுத்ததாக வெளிவந்த திரைப்படம் தான் வந்தா ராஜாவா தான் வருவேன். இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார் மேகா ஆகாஷ்.
தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் சமீபத்தில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு விஷ்ணுவுடன் இந்த நிச்சயதார்த்தம் மிகவும் சிம்பிளான முறையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு மேகா ஆகாஷ் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக கூறி திருமணம் நிச்சயதார்த்தமாகிவிட்டதை உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் மேகா ஆகாஷின் வருங்கால கணவர் யார்? என்பது குறித்த ரகசியம் தற்போது வெளியாகிய எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “பேசினால் போதுமே அன்பே” என்ற குறும்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் மேற்பட்ட நெருக்கம்தான் பின்நாளில் காதலாக மாறியது.
இந்த நிலையில் மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் யார் என்பது தெரிந்தால் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பிரபல அரசியல் தலைவரும். எம் பி யு ஆன திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணு. எஸ் டி ஆர் சாய் விஷ்ணு மற்றும் மேக ஆகாஷ் திருமணம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷனில் மிகவும் பிரம்மாண்டமாக திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் சூழல் நடைபெற இருக்கிறது.