'எங்களுடைய அழகான ஆசீர்வாதம்.. கடவுள் சீக்கிரம்'.. கணவர் மறைவிற்கு பின் முதன்முறையாக உருக்கமாக பதிவிட்ட மீனா !

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

இதனை அடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

இந்நிலையில், 28.06.2022 இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி அவர் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ரம்பா, ஸ்னேஹா, இயக்குனர் ரவி குமார், சுந்தர் சி, மன்சூர் அலிகான், கலா மாஸ்டர், நடிகை லட்சுமி, இயக்குனர் சேரன், நடிகை ரம்பா என பலரும் மீனா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

இதனிடையே, மீனா தனது கணவரின் மறைவு குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என வேண்டுகோள் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

அவர்களின் திருமண நாள் அன்று, அவர் கடந்த வருடம் பதிவிட பதிவை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, நடிகை மீனா தனது கணவர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வித்யாசாகர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மீனா, அதில் : ‘நீங்கள் எங்களுடைய அழகான ஆசீர்வாதம். ஆனால், எங்களிடம் இருந்து உங்களை கடவுள் சீக்கிரம் எடுத்து கொண்டுவிட்டார்.

Meena sagar posted insta post on behalf of her husband vidhyasagar demise

ஆனால், எங்களுடைய இதயத்தில் எப்போதுமே இருப்பீர்கள். என்னுடைய குடும்பமும். நானும் இது போன்ற கடினமான சமயத்தில் எங்களுக்கு ஆறுதல் கொடுத்து எங்களுக்கு அன்பு தந்து பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு நீங்கள் நிச்சயமாக தேவை.

நண்பர்கள், குடும்பம் மற்றும் யாரெல்லாம் எங்களுக்கு இந்த சமயத்தில் அக்கறையும், அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ, அவர்களுக்கு எங்களது நன்றி. உங்கள் அன்பை நாங்கள் உணர்கிறோம்’ என அந்த பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Share this post