அந்த முனகல் BGMஐ லைவ்வாக பாட சொன்ன VJ.. 'நீங்க யாரையாவது கூப்ட்டு போய்' மாயாவின் நச் பதில்..

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுது.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 400 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது. விரைவில் இப்படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் ஒரு சில கதாபாத்திரம் கூட மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருந்தார். அந்த வகையில், இந்த படத்தில் விபச்சாரி ரோலில் நடித்தவர் மாயா. இவருடைய கதாபாத்திரம் சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் படத்தில் செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். அதவும் இவர் நடித்த காட்சி செம பேமசாக பேசப்பட்டு வருகிறது.

Maya reacts to vj who asks for vikram sound bgm in live on interview

அதிலும் இவர் முனகிய சத்தத்தை வைத்தே BGM போட்டு அசத்தி இருப்பார் அனிருத். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாயா, விக்ரம் படத்தில் நான் விபச்சாரியாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் என்னுடைய வேலை. நான் பெரிய உத்தமி இல்லை என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தொகுப்பாளினி ‘எனக்கு அந்த சவுண்டு live’அ கேக்கணும்னு ஆசை’ என்று கேட்க, அதற்கு பதில் அளித்த மாயா ‘அப்படினா, நீங்க யாரையாவது கூட்டிட்டு எங்கியாவது போங்க அந்த சவுண்டு லைவ்வா கேப்பீங்க’ என்று பதில் கொடுத்துள்ளார். மாயாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள், அந்த விஜே’வை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Share this post