VJ பிரியங்காவிடம் ரொமான்டிக் ஆட்டம் போட்ட மன்சூர் அலிகான்.. நொந்துபோன பிரியங்கா.. வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ராஜு வூட்ல பார்ட்டி. இதில் விஜய் டிவி நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள் என கலந்து கொள்ள, செம ஜாலியான ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டுள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். தமிழில் விஜயகாந்துடன் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வெற்றி வசூல் செய்தது.
இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவரது பேச்சு, சுபாவம், expression என இவர் நடிப்பிற்கு தனித்துவம் உள்ளது. 1990 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நிகழ்ச்சியின் புரொமோவில் எல்லோரையும் கலாட்டா செய்யும் மன்சூர் அலிகான், பிரியங்காவுடன் செம ஆட்டம் போட்டு திணற வைத்துள்ளார். தற்போது அந்த ப்ரோமோ செம வைரலாகி வருகிறது.