சக்கு சக்கு வத்திகுச்சி பாடலுக்கு அதே எனர்ஜியுடன் செம ஆட்டம் போட்ட மன்சூர் அலிகான்.. Viral Video

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். தமிழில் விஜயகாந்துடன் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வெற்றி வசூல் செய்தது.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

இவரது பேச்சு, சுபாவம், expression என இவர் நடிப்பிற்கு தனித்துவம் உள்ளது. 1990 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

இந்நிலையில், 1995ல் வெளியான அசுரன் திரைப்படத்தில் நெப்போலியன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஆடி வெளியான சக்கு சக்கு பாடல் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்தது.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

இப்படத்தில் கைதி படத்தின் reference லோகேஷ் பயன்படுத்தியிருந்தது அதிகம் பேசப்பட்டது. மேலும், மன்சூர் அலிகானின் சக்கு சக்கு பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் குறித்து படத்தின் பிரமோஷனின்போது பேசிய லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் எனர்ஜி குறித்து பாராட்டியிருந்தார்.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

அவரது இந்த எனர்ஜி மற்றும் வித்தியாசமான உடல்மொழிக்கு தான் ரசிகன் என்றும் தெரிவித்திருந்தார். இதனால்தான் அந்தப் பாடலை தன்னுடைய படத்தில் பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாடல் மற்றும் அதன் எனர்ஜி அனைவரையும் கவர்ந்துள்ளது மிகவும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Mansoor alikhan performs for old chaku chaku vathikuchi song video getting viral

இந்நிலையில் இந்தப் பாடலுக்கு தற்போது மன்சூர் அலிகான் மீண்டும் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post