சக்கு சக்கு பத்திகிச்சு.. தலையில பத்திகிச்சு.. மன்சூர் அலிகானின் வீடியோ வைரல்.. ட்விட்டரில் பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்

Mansoor alikhan head hair got fire while trying for karate

தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். தமிழில் விஜயகாந்துடன் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வெற்றி வசூல் செய்தது.

Mansoor alikhan head hair got fire while trying for karate

இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

Mansoor alikhan head hair got fire while trying for karate

இவரது பேச்சு, சுபாவம், expression என இவர் நடிப்பிற்கு தனித்துவம் உள்ளது. 1990 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Mansoor alikhan head hair got fire while trying for karate

இந்நிலையில், 1995ல் வெளியான அசுரன் திரைப்படத்தில் நெப்போலியன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஆடி வெளியான சக்கு சக்கு பாடல் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த பாட்டுக்கு செம ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டிருந்தது செம வைரல் ஆனது.

Mansoor alikhan head hair got fire while trying for karate

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி கொடுத்ததில் மன்சூர் அலிகான் குறித்து கூறியிருந்தார். அதில், கைதி படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று தான் இருந்தோம். ஏன்னா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஆட்டிடியூட் ரொம்ப பிடிக்கும். எப்படியாவது அவரை படத்தில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார்.

Mansoor alikhan head hair got fire while trying for karate

இப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான் பற்றி பேசியதிலிருந்து, மன்சூர் பற்றிய பழைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும் விக்ரம் படத்தில் இடம் பெற்ற சக்கு சக்கு பாடலும் தற்போது வைரலானது. இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகான், கராத்தே செய்கிறேன் என்று ஓட்டின் மீது நெருப்பை பற்ற வைத்து தலையால் உடைக்க முயன்று தலையில் தீ பிடித்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this post