'தளபதி 66 படத்துல நான் நடிக்கல.. இது வெறும் வதந்தி' - ட்வீட் செய்து உறுதிப்படுத்திய பிரபல நடிகர் !

Manobala tweets about not acting in thalapathy66

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.

Manobala tweets about not acting in thalapathy66

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, தளபதி66 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியானதாக சரத்குமார் மற்றும் மனோபாலா இருவரும் இருப்பது போல போட்டோ வைரல் ஆனது. தற்போது மனோபாலா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தளபதி66 படத்தில் நான் நடிக்கவில்லை என வெளிப்படையாக கூறிய வதந்திக்கு மனோபாலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Manobala tweets about not acting in thalapathy66

Manobala tweets about not acting in thalapathy66

Share this post