மன்மதன் - 2.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. பக்காவாக ரெடியான STR!

manmadhan part 2 information leaked on social media

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

manmadhan part 2 information leaked on social media

சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.

manmadhan part 2 information leaked on social media

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . சமீபத்தில், இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடித்து வருகிறார்.

manmadhan part 2 information leaked on social media

சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் ‘மன்மதன்’ இளசுகள் மத்தியில் இன்றும் பிரபலம். இப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை AJ முருகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

manmadhan part 2 information leaked on social media

இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும், சீன்களும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. ‘மன்மதன்’ திரைப்படம் வெளியாகி18 வருடங்கள் ஆகும் நிலையில், இந்தப் படத்தின் 2ம் பாகத்தை இயக்கி, நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

manmadhan part 2 information leaked on social media

இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் சிம்பு இது குறித்து அறிவிக்க உள்ளதாகவும், மன்மதன், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், ‘மன்மதன் 2’ பான் இந்தியா படமாக உருவாக வாய்ப்புள்ளகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாகவும் 2024ம் ஆண்டு இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் சிம்பு ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

Share this post