விரைவில் மங்காத்தா-2 அறிவிப்பு? அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்.
அஜித் அவர்களுக்கு மாஸ் திரைப்படமாக அமைந்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் நெகட்டிவ் வேடத்திலும் ஸ்டைலாக தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக பண்ணி இருப்பார்.
அஜித், திரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, ராய் லட்சுமி, மஹத், ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்பது தான் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கை.
ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த வேடத்தில் விஜய் நடிக்க விரும்பியதாக அவரே கூறி இருந்ததாக கூறினார். இதனை பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவிடம் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், தான் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 எடுக்க விரும்பியதாகவும், அதை மங்காத்தா ஷூட்டிங் நேரத்திலேயே அவர்களிடம் கதை சொன்னதாகவும் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், அஜித் மற்றும் அர்ஜுன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் மங்காத்தா 2 வெகு விரைவில் உருவாகப் போகிறதா என கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த போட்டோ ஷாலினியின் பிறந்த நாள் பார்ட்டியில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.