மணிரத்னத்துக்கு 'பொன்னியின் செல்வன்' 2ம் பாகம் மிகப்பெரிய சவால் தான்.. காரணம் இதுதானா ?

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிரத்னத்துக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

5 பாகம் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் முதல் பாகம் & 2ம் பாகத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டது முதல் பாகமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1. 2ம் பாகத்தில் பெருவாரியான கதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்த மீதி 3 பாகங்களின் கதையை மணிரத்னம் படமாக மாற்ற வேண்டும்.

maniratnam going to be tough situation because of ponniyin selvan part 2

இது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முதல் பக்கத்திலேயே படம் நீளமாக இருப்பதாகவும், சில காட்சிகள் பொறுமையாக நகர்வதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இரண்டாம் பாகம் 3 மணிநேரத்தை கடந்து செல்லுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சவாலை எப்படி மணிரத்தினம் சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this post