‘தங்கலான்’ படத்தில் இருந்து மாளவிகா மோகனன் நீக்கம்? பா ரஞ்சித் அதிரடி

malavika mohanan is out of thangalaan movie because of pa ranjith information getting viral on social media

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும்பவர் பா. ரஞ்சித். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

malavika mohanan is out of thangalaan movie because of pa ranjith information getting viral on social media

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

malavika mohanan is out of thangalaan movie because of pa ranjith information getting viral on social media

இந்நிலையில், விக்ரம் நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் தங்கலான். இதன் title announcement வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசை அமைக்கும் இப்படத்தில் பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

malavika mohanan is out of thangalaan movie because of pa ranjith information getting viral on social media

இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து கதாநாயகி மாளவிகா மோஹனன் விலகியதாக தற்போது சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி வருகிறது.

malavika mohanan is out of thangalaan movie because of pa ranjith information getting viral on social media

அதாவது, அந்த கதாபாத்திரத்திற்கு மாளவிகா மோகனன் நடிப்பு சரியில்லாத காரணத்தினால் தான் படத்திலிருந்து இவரை இயக்குனர் பா ரஞ்சித் நீக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மாளவிகா மோகனனுக்கு பதிலாக ஹீரோயினாக வேறொரு நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Share this post