நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலக பிரபலங்கள் !
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. பல்வேறு படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகராக வரும் இவர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் ஆவார்.
தற்போது, நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணாவின் மனைவி மற்றும் மகேஷ் பாபு அவர்களின் தாயார் தான் இந்திரா தேவி. இவர்களுக்கு மகேஷ் பாபு, ரமேஷ் பாபு என இரண்டு மகன்கள் உட்பட மூன்று மகள்கள் உள்ளனர்.
உடல் நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று அதிகாலை காலமானார். இதனையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரை உலக நட்சத்திரங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.