'அவர் Fat Man இல்ல.. என்னோட Special Man..' ரவீந்தர் - மஹாலக்ஷ்மியின் ரொமான்டிக் டின்னர் போட்டோஸ்..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான், இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர்.
ரவீந்தர், மகாலட்சுமி தம்பதியினர் தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும், தங்களின் காதல் குறித்த பதிவுகளையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவி மகாலட்சுமியுடன் ரவீந்தர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர். இந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரிதாக தெரிகிறதே என்று நெட்டிசன்கள் நினைத்து கர்ப்பமாக இருக்கீங்களா அல்லது ஓவராக சாப்பிட்டு அப்படி வயிறு தெரிகிறதா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரெண்டே மாதத்தில் கர்ப்பமா என்றும், இதனை அவர்கள் உறுதி செய்தால் தான் உண்டு என்றும் கூறி வருகின்றனர். வந்தனர். ஆனால், இதுகுறித்து அவர் எந்த பதிலும் கூறவில்லை
இந்நிலையில், இருவரும் இரவு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு மஹாலக்ஷ்மி தனது கணவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தினை இன்ஸ்டா பக்கத்தில் மஹாலக்ஷ்மி பதிவிட்டு இவர் என்னுடைய ஸ்பெஷல் மேன் என கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.