விக்ரமுடன் ரொமான்ஸ் செய்யும் வாணி போஜன்.. வைரலாகும் மகான் Deleted Scenes வீடியோ !
2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மஹான் படத்தில் இருந்து டெலிடட் சீன் வீடியோக்களை படக்குழுவினர் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன், வேட்டை முத்துக்குமார் மற்றும் பலர் நடிப்பில் நேரடியாக OTT தளத்தில் வெளியான திரைப்படம் மஹான்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மகான் படத்தில் நடிகை வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இருப்பினும் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்த கார்த்திக் சுப்புராஜ், வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாதி மட்டுமே படமாக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மீதிக் காட்சிகளை படமாக்க முடியாமல் போனதால் அவரது கதாபாத்திரத்தையே படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி இருந்தார்.
இந்நிலையில், மகான் படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை கொண்டாடும் விதமாக அப்படத்தில் இருந்து டெலிடெட் சீன்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் நடிகை வாணி போஜன் நடித்த காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் அவர் மங்கை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மகான் படத்தில் சிம்ரன் பிரிந்து சென்ற பின்னர் தனிமையில் இருக்கும் விக்ரம் வாழ்க்கையில் வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி போஜன்.
இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அடங்கிய 7 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாணி போஜன் கதாபாத்திரம் சூப்பராக இருப்பதாகவும், இதை ஏன் டெலீட் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.