அல்டிமேட் லவ் அட்ராசிட்டி.. 'கோமாளி' பட இயக்குனர் இயக்கி நடித்திருக்கும் வேற லெவல் 'லவ் டுடே' ட்ரைலர்..

love today trailer video getting viral on social media

2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி.

love today trailer video getting viral on social media

பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.

love today trailer video getting viral on social media

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் அடுத்த படத்தை இயக்க தொடங்கியுள்ளார். தனது இரண்டாவது படத்திற்கு அவர் வைத்துள்ள பெயர் லவ் டுடே. இப்படத்தின் போஸ்டரை இன்று அதிகாலை படக்குழு வெளியிட்டுள்ளார்.

love today trailer video getting viral on social media

அப்பட போஸ்டரை பதிவிடும் போது இயக்குனர் பிரதீப் என்னை விட்டு சென்ற பெண்ணிற்காக இந்த படத்தை டெடிகேட் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் பதிவிடுவதா என இயக்குனரை திட்டி வருகின்றனர்.

love today trailer video getting viral on social media

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இத்திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

love today trailer video getting viral on social media

‘லவ் டுடே’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் உள்ளனர். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் டிரைலரும் அமைந்துள்ளது.

love today trailer video getting viral on social media

இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

love today trailer video getting viral on social media

“இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ ஈர்க்கும்,” என்று படக்குழு கூறுகிறது. ‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share this post