நிக்கிதா.. மாமாகுட்டி.. ரெவி.. இணைந்து போட்ட மரண குத்தாட்டம்.. வைரலாகும் வீடியோ!
மலையாள மொழியில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இவானா. அலீனா ஷாஜி என்பது இவரது இயற்பெயர். மாஸ்டர்ஸ், ராணி பத்மினி, அனுராஹா கரிக்கின் வெல்லம் போன்ற மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாச்சியார், ஹீரோ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து இளசுகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது, இளசுகளின் க்ரஷ் ஆக மாறியுள்ள இவர், ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்து வருகிறார்.
லவ் டுடே படத்தில் ரெவி என்னும் கதாபாத்திரத்தில் ஆஜித் நடித்திருந்தார். பாய் பெஸ்டி ஆக வந்து நல்ல ஸ்கோர் செய்திருந்தார். மாமா குட்டி, ரெவி போன்ற கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆஜித்துக்கு ரசிகர் பட்டாளங்கள் பெருகி வருகிறது. இந்நிலையில், அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் இவானாவுடன் இணைந்து வாரிசு படத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஆஜித். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.