'தளபதி67' படத்தில் இணைந்த பிரபலங்கள்.. லோகேஷின் புது ட்விஸ்ட்.. தளபதி67 அப்டேட்ஸ் வராததற்கு இதுதான் காரணம் !

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

தற்போது, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நல்ல பேன் பேஸ் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம்.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு, வம்சி இயக்கத்தில் தளபதி66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி66 படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். நேற்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 3 போஸ்டர்கள் வெளியானது.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

இதுகுறித்த அப்டேட் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து, விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

மேலும், பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில், தளபதி67 எப்படி இருக்கும் என கேட்டதற்கு, கிளாஸா மாஸா இருக்கும் என பதிலளித்திருந்தார்.

மேலும், தளபதி67 படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்து இருந்தார். இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், தளபதி67 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

இப்படத்தின் புதிய அப்டேட்டாக நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா ஏற்கனவே விஜய் ஜோடியாக தெறி, மெர்சல், கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் கதாநாயகிகளுக்கு பெரிதும் இடம் கொடுப்பதில்லை என்ற குற்றசாட்டு உள்ளது. எனவே, இந்த படத்தில் கதாநாயகிக்கு நல்ல ரோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கன்ஃபார்ம் செய்த லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் கதை என்ன, விஜய்யின் ரோல் என்ன என்பது பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தனது அடுத்த படம் கேங்ஸ்டரை மையமாகக் கொண்ட கதை என சொல்லி உள்ளார். தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ள கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய கதை தானாம். தலைவர்169 படத்தை இயக்க போகும் டைரக்டர்கள் பட்டியலில் லோகேஷ் பெயரும் அடிபட்டதால் ரஜினிக்காக மாஸாக கேங்ஸ்டர் கதையை உருவாக்கினாராம்.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

கைதி, விக்ரம் படங்களிடையே ஒற்றுமை, தொடர்ச்சி இருந்ததை போல் தளபதி 67 படமும் லோகேஷின் முந்தை ஏதாவது ஒரு படத்துடன் அல்லது அந்த படத்தின் கேரக்டருடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் விஜய், கேங்ஸ்டர் ரோலில் தான் நடிக்க போகிறாராம்.

விஜய் கேரக்டர் பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போல் இருக்குமா என கேட்டதற்கு இது அதற்கும் மேலாக இருக்கும் என லோகேஷ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதனால் அடுத்த மிரட்டலான, பிளாக் பஸ்டர் வெற்றிக்கு லோகேஷ் கனகராஜ் தயாராகி விட்டார் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Lokesh kangaraj update about thalapathy67 movie and information leaked about actors

அக்டோபர் மாதம் 2ம் தேதி படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தளபதி67 படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், ஜாபர் ஆகியோர் இணைந்திருப்பதாக கூறப்படுவதால், விக்ரம் படத்தில் பயன்படுத்திய LCU டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்துவாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

இதனிடையே பிரபல சேனலுக்கு பேட்டியளித்த லோகேஷ் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி கமலின் பழைய விக்ரம் கதாபாத்திரத்தை போல விஜய்க்கு Spinoff திரைப்படம் எடுத்தால் எந்த கதாபாத்திரத்தை விரும்புவீர்கள் என கேட்கப்பட்ட போது, லோகேஷ் கனகராஜ் “கில்லி படத்தில் வேலு கதாபாத்திரம் தான்” என பதிலளித்துள்ளார்.

மேலும் தளபதி67 குறித்து பேசிய லோகேஷ் “தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதை பற்றி பேச முடியும். மேலும் தற்போது அவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை முடித்த பின் தளபதி 67 குறித்து அப்டேட்ஸ் வரும்” என பேசியுள்ளார்.

Share this post