தளபதி67'ல Rolex கதாபாத்திரம் ? வைரலாகும் ட்வீட்.. லோகேஷின் அடுத்த மாஸ் பிளான் !

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

தற்போது, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நல்ல பேன் பேஸ் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம்.

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு, வம்சி இயக்கத்தில் தளபதி66 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதுகுறித்த அப்டேட் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து, விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

மேலும், பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில், தளபதி67 எப்படி இருக்கும் என கேட்டதற்கு, கிளாஸா மாஸா இருக்கும் என பதிலளித்திருந்தார்.

மேலும், தளபதி67 படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்து இருந்தார். இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில், தளபதி67 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

இப்படத்தின் புதிய அப்டேட்டாக நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா ஏற்கனவே விஜய் ஜோடியாக தெறி, மெர்சல், கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் கதாநாயகிகளுக்கு பெரிதும் இடம் கொடுப்பதில்லை என்ற குற்றசாட்டு உள்ளது. எனவே, இந்த படத்தில் கதாநாயகிக்கு நல்ல ரோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

தற்போது, விக்ரம் படத்தில் பிரபலமாக பேசப்படும் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கும் தளபதி67 படத்திற்கும் சம்மந்தம் இருப்பதாக ட்வீட் பரவி வருகிறது. அதாவது, கைதி படத்தை விக்ரம் படத்தோடு இணைத்தது போல தளபதி67ல் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்காக ரோலெக்ஸ் ஷூட்டிங் எடுத்த அந்த செட் கூட பிரிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த ட்வீட்டை Fake என ஒரு புறம் சொல்ல, மறுபுறம் ட்வீட் வைரல் ஆகி வருகிறது.

Lokesh kanagaraj to link rolex role in thalapathy67 viral tweet

Share this post