'விக்ரம்' ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையில் கத்திய லோகேஷ் கனகராஜ்.. Fan Boy Moment ஆக மாறிய தருணம் !

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து கடந்த வாரம் ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து கேன்ஸ் விழாவிற்கு சென்றிருக்கும் கமல் ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

விக்ரம் படத்தில் நான்காவது ஒருவர் வருவதாக வதந்தி பரவி வருகிறதே என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கமல், வதந்தி எல்லாம் இல்லை. உண்மை தான். அது சூர்யா தான், அற்புதமான ரோலில் கடைசி நிமிடத்தில் தோன்றி நடித்துள்ளார்.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

அவருடைய கதாபாத்திரம் தான் ‘விக்ரம்’ படத்தின் 3ம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும். இதை கேட்ட ரசிகர்கள் என்னது விக்ரம் பார்ட் 3 வருதா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

அதே சமயம், க்ளைமாக்சில் 10 நிமிடங்கள் சூர்யா வரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கைதி 2 பட கதையின் ஆரம்பமாக இருக்கும்.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

கைதி படத்தின் முதல் பாகத்தில் நடித்த கேரக்டர்கள் பலரும் இதிலும் நடித்துள்ளதால், கைதி படத்துடன் தொடர்புடையதாக விக்ரம் படம் இருக்கும் என கூறப்பட்டது.

விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

அந்த வகையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி விக்ரம் படத்தின் முதல் காட்சியை படமாக்கியபோது நடந்த அனுபவத்தை லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Lokesh kanagaraj fan boy moment in vikram shooting spot

அந்த காட்சியில், கமலின் அப் ஷாட் எடுத்ததாக போது முதன்முறையாக கமல் நடிப்பதை நேரில் பார்த்த பூரிப்பில், அந்த காட்சி முடிந்ததும் கட் சொல்வதற்கு பதிலாக கெட்ட வார்த்தையில் கத்திவிட்டதாக கூறி உள்ளார்.

Fan Boy Moment ஆக அது மாறியதால் பூரிப்பில் கத்திவிட்டதாக கூறியுள்ள லோகேஷ் நடந்தவற்றை ஆர்வமாக பேட்டியில் கூறினார்.

Share this post