லோகேஷ் - வெங்கட் பிரபு வீடியோ வைத்து செம மீம் கிரியேட் செய்த நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ !

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் வெங்கட் பிரபு.

கங்கை அமரன் அவர்களின் மகனாக இருந்தாலும் தனது கடின உழைப்பினால், திரையுலகில் தற்போது தனக்கென்ற இடத்தை உருவாக்கியுள்ளார்.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், முதல் படமே தாறுமாறாக ஹிட் அடித்தது.

அப்படத்தை தொடர்ந்து, சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்தார்.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

அதிலும், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் செம ஹிட் ஆகி ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். அதன் பின்னர், பிரியாணி மற்றும் மாஸ் திரைப்படங்கள் அவ்வளவாக ஓடவில்லை.

சென்னை 600028 2, லைவ் டெலிகாஸ்ட் படங்களை இயக்கிய இவர், கடந்த ஆண்டு சிம்புவிற்கு மாநாடு மூலம் பெரிய ரீஎண்ட்ரி கொடுத்தார்.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

தனது இயக்கத்திற்கு மீண்டும் ஒரு ரீஎண்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது பார்ட்டி என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

சில படங்களில், நடிகராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

மாநகரம் மற்றும் கைதி என்னும் 2 படம் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஹாட்ரிக் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அடுத்தடுத்து தந்த நிலையில், இவருக்கு 3 வது படமே தளபதி விஜய் அவர்களை வைத்து எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

இதன் மூலம் மாஸ்டர் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. ஒரு அளவுக்கு சுமாரான படமாக அமைந்த போதிலும் படம் நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

அண்மையில், வெங்கட் பிரபு மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளனர்.

அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து அதற்கு வடிவேலு பாணியில் வாய்ஸ் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

Lokesh kanagaraj and venkat prabhu video getting viral on social media

இதனை வெங்கட் பிரபு மற்றும் லோகேஷ் பார்த்துவிட்டு, அதற்கு பதில் அளிக்கும் விதமாக சிரிக்கும் இமோஜிகளை பதிவிட்டு விட்டார். இந்த வீடியோ தான் தற்போது இணையாயத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share this post