OMG.. லக்ஷ்மி மேனன்'ஆ இது..? Slim'ஆ Cute Doll மாதிரி ஆகிட்டாங்க..!
பள்ளி படிக்கும் பருவத்திலேயே மலையாள மொழியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். இதனைத் தொடர்ந்து, பிரபு சாலமன் இவரை கும்கி திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, சசிகுமார் ஜோடியாக சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இரண்டும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே அமைத்து தந்தது. பின்னர், குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், றெக்க போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஸ்லிம் பிட்டாக இருந்த லக்ஷ்மி மேனன், கொஞ்சம் வெயிட் போட்டதனால் வாய்ப்பு மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் தகவல் பரவி வந்தது.
மேலும், பள்ளி படிக்கும் பருவத்திலேயே நடிக்க வந்ததால், தற்போது படிப்பை முடிக்க சினிமாவில் இருந்து சிறிது பிரேக் எடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, படிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் லக்ஷ்மி மேனன்.
இந்நிலையில், தற்போது லக்ஷ்மி மேனன் திடீரென ஸ்லிம்மாக மாற்றி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.