விஜய் மகன் படம் இயக்குவது உறுதி… பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வாழ்த்தால் அம்பலம்..!
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
அதற்குப் பின்னர், இந்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால், பலரோ குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், சஞ்சய்க்கு லைக்கா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ கண்டிப்பா குட்டி தளபதி படத்தோட அப்டேட்டும் வெளிவரும் என்று கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.
முன்னதாக, ஜேசன் சஞ்சய் தற்போது இயக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் 2025ல் தொடங்க உள்ளதாகவும், கதையின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டதாம். அதோடு, முதல் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா அல்லது சுஷின் ஸ்யாம் கமிட் ஆவார்கள் என தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
Happy Birthday to the emerging Director #JasonSanjay 🎉 May your path be filled with success and endless achievements. 🤗 Here’s to directing your dreams into reality! 🎬#HBDJasonSanjay #JasonSanjay pic.twitter.com/PIuKLK0U6l
— Lyca Productions (@LycaProductions) July 25, 2024