வாரிசு ஷூட்டிங்கில் யாருடன் போட்டோ எடுத்து குஷ்பூ ஷேர் செய்திருக்கிறார்ன்னு பாருங்க !

kushboo shared photos taken with popular actors together

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

kushboo shared photos taken with popular actors together

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

kushboo shared photos taken with popular actors together

இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

kushboo shared photos taken with popular actors together

படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து ரசிகர்களை ஒரு விதத்தில் குதூகலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சரத்குமார், பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

kushboo shared photos taken with popular actors together

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ சரத்குமாரின் நாட்டாமை மற்றும் பிரபுவின் சின்னத்தம்பி படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். இந்த இரண்டு நாயகர்களுடனும் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வரும் குஷ்பூ அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார். தற்போது குஷ்புவின் பதிவு வைரலாகி வருகிறது.

kushboo shared photos taken with popular actors together

Share this post