"இப்போ பிளாஸ்டிக் சர்ஜரி அவசியமா?" என கேட்ட ரசிகை.. தரமான பதிலடி கொடுத்த குஷ்பு.. வைரலாகும் பதிவு !
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பூ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். சற்று பப்ளியாக இருந்த குஷ்பூ, ஸ்லிம் பிட்டான நடிகைகள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.
இப்படி பிரபல நடிகையாக வலம் வந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு, சமீபகாலமாக கடின உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் முதல் படத்தில் பார்த்த மாதிரி இருக்கீங்க, இப்போ கூட ஹீரோயினா நடிக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். அவரிடம் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்றெல்லாம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, தான் தினமும் வாக்கிங் சென்றதாகவும், அதன் மூலமே உடல் எடையை குறைத்ததாகவும் கூறினார். உடல் எடையை குறைத்த பின்னர் நடிகை குஷ்பு, விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் தினந்தோறும் உங்களின் வயது குறைந்துகொண்டே செல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏராளமான பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், ஒரு சில நெகடிவ் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு குஷ்புவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் மாடர்ன் கோல்டன் நிற உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ போட்டிருந்தார். இதைப்பார்த்த பெண் ஒருவர், அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் சொன்ன குஷ்பு, “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு” என தரமான பதில் கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.